தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரத்து - நடிகர் ரஜினிகாந்த் என்ன நினைக்கிறார்ன்னு தெரியுமா?
ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் இணைந்து வாழ்வதையே நடிகர் ரஜினிகாந்த் விரும்புவதாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த வாரம் அறிவிப்பை வெளியிட்டார். இவர்களின் இந்த விவகாரத்து அறிவிப்பு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரைருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில், ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் இணைந்து வாழ்வதையே நடிகர் ரஜினிகாந்த் விரும்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில், “ரஜினி சார் தனது மகளின் திருமண பிரிவை நினைத்து மிகவும் வேதனைப்படுகிறார். பிரிவு தற்காலிகமானது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திருமண பிரச்னைகளை பேசி சீர்செய்யுமாறு தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யாவை வற்புறுத்தி வருகிறார்’ என்றார்.
இருப்பினும், ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் பிரிவு குறித்து ரஜினிகாந்த் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் வெளியில் தெரிவிக்கவில்லை.
கடந்த வாரம் இது குறித்து பேசிய தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா கூறுகையில், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருக்குமிடையே வந்திருப்பது சாதாரண கணவன் மனைவி சண்டை தான். அவர்களை இணைக்க குடும்பத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றார்.