முகத்தில் பொலிவு இல்லாமல் சிரிக்கும் ரஜினி... குழந்தைகளோடு விளையாடும் தனுஷ் - விவாகரத்துக்கு பின் வைரலாகும் போட்டோ
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் அவர்களுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பு வெளியான ஒரிரு வாரங்கள் ஆன நிலையில், தற்போது ரஜினி மற்றும் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2004ம் ஆண்டு நடிகர் தனுஷுக்கும், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணமாகி 18 ஆண்டுகளான ஆன நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த விவாகரத்து அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் அனைவரும் நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல் இவர்களது விவாகரத்து முடிவால் நடிகர் ரஜினி கடும் மன உளைச்சல் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், விவாகரத்து அறிவிப்பு வெளியாகி ஒரிரு வாரங்கள் ஆன நிலையில், தற்போது ரஜினி மற்றும் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபல சினிமா பைனான்சியரான அன்புச்செழியன் தனது மகளில் திருமண அழைப்பிதழை கொடுக்க ரஜினி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
அதில் முகத்தில் பொலிவின்றி காட்சி தரும் ரஜினி, சோகத்தை மறைத்து சிரித்தபடி போஸ் கொடுத்திருக்கிறார். அதேபோல் தனுஷும், தனது அண்ணன் செல்வராகவனின் குழந்தைகளுடன் விளையாடும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


திருகோணமலையில் பரபரப்பு! அகற்றப்பட்ட புத்தர் சிலை: காலவல்துறையினரின் கன்னத்தில் அறைந்த பிக்கு IBC Tamil