இனி... உனக்கு இந்த ஆசையெல்லாம் நிறைவேறாது... - தனுஷை வச்சு செய்யும் ரஜினி ரசிகர்கள்
கோலிவுட், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் ரொம்ப பிசியான நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.
கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷுக்கும், ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் உள்ளனர். தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார்கள்.
இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் இந்த எதிர்பாரா அறிவிப்பு சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது.
இவர்களது விவாகரத்து முடிவால் நடிகர் ரஜினி கடும் மன உளைச்சலில் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை அறிந்த ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் தனுஷை திட்டித் தீர்த்து வருகிறார்கள்.
ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்துள்ளது. இதனை பல்வேறு மேடைகளில் அவரே கூறி உள்ளார்.
இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள், ‘ஓ.. உனக்கு இந்த ஆசை வேற இருந்துச்சா... இனி வாய்ப்பில்ல ராஜா’ என்று கிண்டலடித்தும், திட்டித் தீர்த்து வருகிறார்கள்.