யாரையும் மதிக்காமல் விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா? - இனி நீ இல்லை... முடிவெடுத்த ரஜினி? - நடந்தது என்ன?

rajini decision dhanush aishwarya ரஜினிகாந்த் தனுஷ் ஐஸ்வர்யா broke-up சவுந்தர்யா
By Nandhini Feb 08, 2022 09:34 AM GMT
Report

 தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். தனுஷுடன் வாழ்க்கை நடத்தியபோது, அப்பா ரஜினிக்கு செல்ல மகளாக வலம் வந்தார் ஐஸ்வர்யா.

ரஜினி எங்கு சென்றாலும் ஐஸ்வர்யாவை தான் கூட அழைத்துச் செல்வார். ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்கு கூட ரஜினிக்கு துணையாக ஹைதராபாத்துக்கும் சரி, மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாட்டுக்கு சென்றாலும் சரி, ரஜினி ஐஸ்வர்யாவை தான் கூட அழைத்துச் செல்வார்.

இந்நிலையில், தன் நெருங்கிய நண்பரின் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு மனைவி லதா, இளைய மகள் சவுந்தர்யாவுடன் சென்றார் நடிகர் ரஜினிகாந்த். விழாவில் கலந்து கொண்டுவிட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார்.

வழக்கமாக ரஜினியுடன் வரும் ஐஸ்வர்யாவை காணவில்லையே என்று கேட்டு வருகின்றனர் ரசிகர்கள். மேலும், ஐஸ்வர்யா மட்டும் தனுஷுடன் சேரவில்லை என்றால் இனிமேல் அவரை ரஜினி தன்னுடன் எங்கும் அழைத்துச் செல்ல மாட்டார் என்று பேச்சு கிளம்பி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஐஸ்வர்யாவுக்கு பதில் இனி சவுந்தர்யா தான் அப்பாவுடன் வெளியே செல்வார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

விவாகரத்து விஷயத்தால் ஐஸ்வர்யா மீது கடுமையான கோபத்தில் உள்ளார் ரஜினிகாந்த். உனக்கு பிள்ளைகளை விட உன் சந்தோஷம் தான் முக்கியமாகப் போச்சா என்று அதட்டி திட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

அப்பாவின் கோபத்தை பார்த்து மிரண்டுப்போன ஐஸ்வர்யா மனம் மாறிவிட்டாராம். ஆனால் யார் என்ன சொன்னாலும் சரி இனி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்று உறுதியாக உள்ளார் நடிகர் தனுஷ்.

யாரையும் மதிக்காமல் விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா? - இனி நீ இல்லை... முடிவெடுத்த ரஜினி? - நடந்தது என்ன? | Dhanush Aishwarya Broke Up Rajini Decision