பெத்த புள்ள மேல அக்கறை இருக்கா... உன் இஷ்டத்துக்கு இருக்க...கோப உச்சத்தில் திட்டித் தீர்த்த ரஜினி - கதறியழுத ஐஸ்வர்யா

dhanush aishwarya anger broke up rajini upset
By Nandhini Jan 31, 2022 09:37 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த் விவாகரத்து செய்துகொண்ட தன் மகள் ஐஸ்வர்யாவை திட்டித் தீர்த்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷ் மற்றும் மனைவி ஐஸ்வர்யா சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவிப்பை வெளியிட்டனர்.

இதனையடுத்து, இவர்கள் இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக உள்ளனர். இந்நிலையில், படப்பிடிப்பிற்காக ஐதராபாத் சென்ற இருவரும் ஒரே ஓட்டலில் வேறு வேறு அறைகளில் தங்கியுள்ளனர். விவாகரத்து அறிவிப்பை வெளியானதிலிருந்து, நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ஹைதராபாத்திலிருந்து தந்தைக்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

அப்போது, நடிகர் ரஜினி, ஐஸ்வர்யாவை கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார். 2 மகன்கள் இருக்கும் போது அவர்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல், உன் இஷ்டத்திற்கு விவாகரத்து செய்து விட்டாயே? உன் அம்மாவிற்கும் எனக்கும் தான் பிரச்சனை இருந்திருக்கிறது. உனக்காகவும், சௌந்தர்யாவிற்காகவும் தான் அமைதியாக இருந்திருக்கிறேன். எனக்கு என் மகிழ்ச்சி தான் முக்கியம் என்று நினைத்திருந்தால், எப்போதோ உன் அம்மாவை விட்டு போயிருப்பேன். உன் பிள்ளைகள் மீது சுத்தமாக அக்கறை உனக்கு கிடையாது என்று கூறிவிட்டு வைத்து விட்டாராம்.

இதனைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா, தன் தாய் லதாவிற்கு போன் செய்து கதறி அழுதுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.