ரஜினியை கஷ்டப்படுத்துகிறார்கள்... தனுஷ் நீ உப்பு தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் - சாபம் விட்ட பிரபல தயாரிப்பாளர்

dhanush aishwarya viral news broke up Rajini Sad K.Rajan interview
3 மாதங்கள் முன்

திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நிலையில் தனுஷ் மற்றும் அவரது மனைவியும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பால் திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த ரஜினியின் குடும்பமும் இடிந்து போய் உள்ளது. தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த சில மாதங்களாகவே பிரிந்து இருந்து வந்ததாகவும், அவர்களை சமாதானப்படுத்த ரஜினி முயற்சி செய்தும் அதில் பலன் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு மூத்த தயாரிப்பாளர்களில் ஒருவரான கே. ராஜன் பேட்டி கொடுத்துள்ளார்.

அப்போ அவர் பேசியதாவது -

தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு உண்மை காரணம் என்ன என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் ஏற்கனவே கூறியது போல தமிழ் திரையுலகில் கமல்ஹாசனும் தனுஷின் தான் நாகரீகம் இல்லாதவர்கள் அதையே இப்போதும் சொல்கிறேன்.

ரஜினிகாந்த் மிகவும் நாகரிகமான மனிதர், இதுபோன்ற விஷயங்களால் அவர் உள்ளுக்குள் வேதனைப்படுவார், அவர் அரசியலுக்கு வராமல் போனதற்கான காரணமும் இதுதான். எளிதாக மன உளைச்சல் அடையக் கூடியவர், தனக்கு எதிராக வரும் அவ பெயர்களை அவர் ஒருபோதும் தாங்கிக் கொள்ள மாட்டார்.

18 வருடங்கள் வாழ்ந்து விட்டு 2 குழந்தைகளை பெற்றெடுத்து விட்டு இப்போது டைவர்ஸ் செய்து கொள்கிறோம் என இவர்கள் எப்படி கூறுகிறார்கள். இருவருக்கும் நடந்தது காதல் திருமணம்தான்.

இரண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் தான் திருமணம் நடந்தது. இப்போது கூட இருவரும் ஒன்றாக சேர்ந்து விடலாம். தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் தனுஷ் கிசுகிசுக்கப்படுவதை குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன், நான் அதை பார்த்தது கிடையாது.

இப்போது ரஜினியை குறித்து நான் கவலைபடுகிறேன். நிச்சயம் உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும், வினை விதைத்தவன் வினை அறுத்தே ஆக வேண்டும் இது பெரியவர்கள் சொன்ன வார்த்தை, இது வாழ்க்கையின் நடைமுறையாக இருந்து வருகிறது.

ஆகவே தனுஷ் என்ன விதைத்தார் என்ன அறுப்பார் என்று எனக்கு தெரியாது. ஆனால், 2 பிள்ளைகளின் நிலைமையை அவர் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்னும் இரண்டு மூன்று தினங்களில் அவர்கள் ஒன்று சேர்ந்து விட வேண்டும்.

ரஜினி குடும்பத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் இதில் தலையிட்டு அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

ரஜினியை கஷ்டப்படுத்துகிறார்கள்... தனுஷ் நீ உப்பு தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் - சாபம் விட்ட பிரபல தயாரிப்பாளர்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.