பிரிவிற்கு பிறகு பெயரை மாற்றிய ஐஸ்வர்யா - ஷாக்கான ரசிகர்கள்

dhanush aishwarya namechanged தனுஷ் ஐஸ்வர்யா broke-up பெயர் மாற்றம்
By Nandhini Feb 16, 2022 10:43 AM GMT
Report

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்து விடுவதாக சமூகவலைத்தளத்தில் அறிவித்தனர்.

இவர்களின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள், ஒட்டுமொத்த சினிமாத்துறையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. சேர்ந்து வாழும்படி ரசிகர்கள் இருவருக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இவர்களை சேர்த்து வைக்க உறவினர்கள், நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த காதலர் தினத்தையொட்டி, டிப்ஸ் தயாரித்த ‘முசஃபர்’ என்ற தலைப்பில் தனது வரவிருக்கும் இசை வீடியோவின் டீசரை ஐஸ்வர்யா பகிர்ந்தார். இப்பாடலின் தெலுங்கு பதிப்பை சாகர் பாடியுள்ளார்.

மலையாளத்தை ரஞ்சித் கோவிந்த் மற்றும் தமிழில் அனிருத் பாடியுள்ளனர். ஐஸ்வர்யாவும் இதய வடிவிலான கேக்கின் புகைப்படத்தை வெளியிட்டு “A Promise made is a Promise Keep… பிப்ரவரி 14” என்று பதிவிட்டார்.

பிரிவிற்கு பிறகு பெயரை மாற்றிய ஐஸ்வர்யா - ஷாக்கான ரசிகர்கள் | Dhanush Aishwarya Broke Up Name Changed

ஆனால், விவாகரத்து அறிவித்த பின்னரும், சமூக வலைதளங்களில் தன் பெயருக்குப் பின்னால் இருக்கும் தனுஷ் பெயரை இன்னும் நீக்கவில்லை ஐஸ்வர்யா. ஆனால், சமீபத்தில் வெளியான ‘முசஃபர்’ டீசரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று வெளிவந்துள்ளது.

இதனால், ரசிகர்கள் சமந்தா மாதிரியே இவரும் பெயரை சமூகவலைத்தளங்களில் நீக்கிவிடுவாரோ என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.