தனுஷை ஆரம்பத்திலிருந்தே மதிக்காமல் அடக்கி வைத்த லதா ரஜினிகாந்த் - வெளியான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் தனுஷுக்கும், லதா ரஜினிகாந்த்திற்கும் இடையே எப்படிப்பட்ட உறவு இருந்தது என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷை மருமகன் என்றும் பாராமல் லதா அடக்கியே வைத்து வந்துள்ளாராம். ரஜினிகாந்த் தனுஷை தனது மகன் போல் பார்த்தாலும் லதா, தனுஷை கொஞ்சம் கூட மதிக்கவில்லையாம்.
தனது மகளுக்கு நிகராக கூட தனுஷை லதா பார்த்ததே கிடையாதாம் என்று கூறப்படுகிறது. இத்தகவல் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. இருந்தாலும், தனுஷும் ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து விட மாட்டார்களா என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.