வேலி போட்ட லதா ரஜினிகாந்துக்கு தக்க பதிலடி கொடுத்த தனுஷ் - நடந்தது என்ன?
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார்.
இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
தன் மகள் வாழ்க்கையை கெடுத்த தனுஷ்ஷை சும்மா விட மாட்டேன் என்று லதா ரஜினிகாந்த் முடிவெடுத்ததாக தகவல் வெளியானது.
மேலும் லதா ரஜினிகாந்த் தனக்கு தெரிந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் தனுஷை வைத்து படம் எதுவும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, தனுஷுக்கும் தற்போது புதிய படங்களுக்கான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நீங்க என்ன எனக்கு வாய்ப்பு தருகிறது? எனக்கு நானே இருக்கேன் என்ற பாணியில், தனுஷ் இனி நானே படம் இயக்குகிறேன் என்ற புதிய களத்தில் குதித்துள்ளாராம்.
இதனிடையே, தானே இயக்கிய ‘நாகஜூனா’ படத்தை தூசி தட்டிவிடலாம் என்ற யோசனையிலும் இருந்து வருகிறாராம்.
வாய்ப்பு இல்லையென்றால் என்ன? நானே ஒரு இயக்குனர்... இப்போ உங்களால என்ன பண்ண முடியும் என்பதை லதா ரஜினிகாந்த்-க்கு பதிலடி தரும் வகையில் தன்னுடைய செயலில் இறங்கியுள்ளாராம்.
தனுஷின் இந்த முயற்சிக்கு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.