‘சும்மா விட மாட்டேன்..’ காய் நகர்த்திய லதா ரஜினிகாந்த்... - அலறி தெறித்து ஓடும் அந்த நடிகைகள் - சிக்கலில் தனுஷ்

actress dhanush aishwarya upset தனுஷ் ஐஸ்வர்யா ரஜினி broke-up latha-rajinikanth லதா ரஜினிகாந்த்
By Nandhini Mar 07, 2022 06:55 AM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.

தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

‘சும்மா விட மாட்டேன்..’ காய் நகர்த்திய லதா ரஜினிகாந்த்... - அலறி தெறித்து ஓடும் அந்த நடிகைகள் - சிக்கலில் தனுஷ் | Dhanush Aishwarya Broke Up Latha Rajinikanth Upset

தற்போது, தனுஷை நம்பி தங்களின் கெரியரை ஒப்படைத்த நடிகைகளுக்கு கடும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம். எவ்வளவோ பேசியும் தனுஷ் முடியாது என்று கூறி வரும் நிலையில், அவரின் கெரியரை காலி செய்யும் வேலையில் லதா ரஜினிகாந்த் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், தனுஷுடன் யார், யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு பெரிய ஆப்பு வைக்கப்பட்டுள்ளதாம்.

தனுஷூடன் இருந்தால் நம்முடைய கெரியர் நன்றாக இருக்கும் என்று நினைத்த நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத அளவிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாம்.

இதனால், தனுஷுடன் நெருக்கமாக இருந்த நடிகைகள், இனி தனுஷை நம்பினால் நம்முடைய கெரியர் மொத்தமாக காலி ஆகிவிடும் என்று நினைத்து, அவரவர் அலறி அடித்துக் கொண்டு ஓடத் தொடங்கியுள்ளனராம்.

தனுஷுடன் நெருக்கமாக இருந்த நடிகைகளுக்கு, தமிழ் சினிமாத்துறையில் அதிகாரம் மிக்க நபர் ஒருவர் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாம். அந்த அதிகாரமிக்க நபரிடம் எச்சரிக்கை விட சொன்னதே லதா ரஜினிகாந்த் தான் என்று சொல்லப்படுகிறது.

‘எங்கள் மூலம் சினிமாத்துறையில் முன்னேறிவிட்டு, என் மகளையே வேண்டாம் என்று தூக்கி எறியும் தனுஷை நான் சும்மா விட மாட்டேன்’ என்று களத்தில் இறங்கியுள்ளாராம் லதா ரஜினிகாந்த் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  

You May Like This