திருப்பதியில் ஐஸ்வர்யா - தனுஷ் இணைக்க தடபுடலா நடந்த ஏற்பாடு? கஸ்தூரி ராஜா எண்ணம் பலித்ததா? நடந்தது என்ன?
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விவாகரத்து செய்வதாக அறிவித்தார்கள். இவர்களின் அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமாத்துறையையும், ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதையடுத்து நாளுக்கு நாள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களிலும், மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தஙகள் வேலைகளில் பிஸியாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா.
தனுஷிடன் சேர்ந்து வாழ ஐஸ்வர்யா விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், தனுஷிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், படப்பிடிப்பு தளங்களில் ஜாலியாக இருந்து வந்த நடிகர் தனுஷ் தற்போது எல்லாம் சீரியசாக இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
தனுஷையும், ஐஸ்வர்யாவையும் இணைத்து வைக்க கஸ்தூரி ராஜா முயற்சி செய்து வருகிறார். தனுஷிடம் நீண்ட நேரமாக பேசியதற்கு, எனக்கு சில நாட்கள் கொடுங்க.. நான் என் முடிவை சொல்கிறேன் என்று கூறி விட்டு சென்றுள்ளாராம் தனுஷ்.
இதனையடுத்து திருப்பதியில் ஐஸ்வர்யாவையும், தனுஷ் மற்றும் பிள்ளைகளையும் வர வைத்து ஒன்று சேர்த்து வைப்பதற்காக கஸ்தூரி ராஜா ஏற்பாடு செய்துள்ளார்.
இது குறித்து நடிகர் தனுஷிடம் கூறியதற்கு, ‘யாரைக் கேட்டு இந்த ஏற்பாடுகளையும் செய்தீர்கள்..ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ எனக்கு துளி கூட விருப்பம் இல்லை. என்னை கட்டாயப்படுத்தாதீர்கள்’ என்று அப்பாவிடம் தெரிவித்து செல்ல, திருப்பதி ஏற்பாடுகள் அனைத்தையும் கஸ்தூரி ராஜா ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.