சுவிஸ் நாட்டு நடிகையோடு ஜோடி சேர்ந்த தனுஷ் - வெளியான தகவல்
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர். இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு 'நானே வருவேன்' படத்தில் மீண்டும் இணைய இருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படத்தில் தனுஷ் ஜோடியாக சுவிஸ் நாட்டு நடிகை எல்லி அவ்ரம் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவர், அமிதாப் பச்சன் மற்றும் ரஷ்மிகா மந்தான்னா நடிப்பில் உருவாகி வரும் 'குட் பை (Good Bye)' படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தற்போது தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார் எல்லி அவ்ரம். இந்தப் படத்தை அடுத்து அவர் 'சாணிக்காயிதம்' படத்தின் இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
