இரு மகன்களால் தனுஷ், ஐஸ்வர்யா வாழ்க்கையில் நடந்த கெட்ட விஷயம்? - ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் அதிக நேரம் செலிவிடவும், அவர்கள் வளரட்டும் என்று தன் கெரியருக்கு பிரேக் விட்டதாக பேட்டி ஒன்றில் மனம் திறந்து ஐஸ்வர்யா பேசியுள்ளார்.
யாத்ரா, லிங்கா வளரட்டும் என்று தான் தனுஷும், ஐஸ்வர்யாவும் காத்துக்கொண்டிருந்தார்களாம். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இருவரும் பிரிவது என்று முடிவு செய்த போது ரஜினியிடம் கூறியுள்ளனர்.
என்ன விளையாட்டு இது... 2 பிள்ளைகளை நினைத்துப் பாருங்கள்.. என்று கூறி ரஜினி சமாதானம் செய்து வைத்து பிரச்சினையை சரிசெய்தாராம். சரி பிள்ளைகள் வளர்ந்த பிறகு இருவரும் பிரிந்துவிடலாம் என்று பேசி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மகன்கள் வளர்ந்ததும், இனியும் நாம் இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று தனுஷும், ஐஸ்வர்யாவும் தனித்தனி பாதையில் சென்று விட்டனர்.
மகன்கள் வளர்ந்ததால் ஏற்பட்ட நல்ல விஷயம், ஐஸ்வர்யா மீண்டும் படம் இயக்குவது. ஆனால், தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்தது கெட்ட விஷயமாக மாறிவிட்டது என்று ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.