உலகளவில் சாதனை படைத்த ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல் இந்த நாட்டு ஒரிஜினலா? கிளம்பிய புது சர்ச்சை

Dhanush Anirudh Ravichander Aishwarya Rajinikanth
By Nandhini May 12, 2022 01:14 PM GMT
Report

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் தனுஷ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான படம் தான் ‘3’.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் மாஸ் ஹிட்டடித்தது.

இதில் குறிப்பாக, அனிருத் இசையில், தனுஷ் எழுதி பாடி, கடந்த 2011-ம் ஆண்டு யூ-ட்யூப்பில் வெளியான ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்து மாபெரும் சாதனை படைத்தது.

ஆனால், தற்போது உலகளவில் இந்தியாவிலிருந்து முதன்முறையாக யூ-டியூப்பில் சாதனை படைத்த இப்பாடலுக்கு புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.

அதாவது, துருக்கியில் வெளியான ‘கோககோலா’ விளம்பரத்தின் பாடலை காப்பி அடித்து, ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பலரும் துருக்கியின் விளம்பரப் பாடல்களை சமூகவலைத்தளங்களில் தற்போது பகிர்ந்து வருகிறார்கள்.

ஆனால், ஒய் திஸ் கொலவெறிப் பாடலைத் தான் அந்த விளம்பரத்தில் காப்பி அடித்துள்ளதாகவும், கடந்த 2011-ம் ஆண்டு ‘ஒய் திஸ் கொலவெறி டி’ பாடல் வெளியானது.

இதனையடுத்து, கடந்த 2015ம் ஆண்டு துருக்கியில் இந்த விளம்பரப் பாடல்வெளியானதாக கூறி நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.