என்னை தனுஷ் காதலித்தார்... - வெளிப்படையாக கூறிய பிரபல நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி

broke-up dhanush-aishwarya aishwarya-rajesh
By Nandhini Apr 07, 2022 07:10 AM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.

தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வட சென்னை பட நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில் -

‘வட சென்னை’ படத்தில் என்னை, தனுஷ் ஜோடியாக நடிக்க வெற்றி சார் அழைத்தார். தனுஷூடன் நடிக்க வேண்டும் என்று அனைத்து நடிகைகளும் ஆசைப்படுவார்கள். அவருடன் நடிக்கும்போது ஒரு ஸ்பெஷலான ஃபீல் எனக்கு ஏற்பட்டது. என் கதாபாத்திரத்தை பார்த்தாலே லவ் பண்ற மாதிரி இருக்கும். படத்தில் தனுஷே என்னை லவ்வே பண்ணிட்டாரு. என்னை பார்த்ததும் அவர் லவ் பண்ணிடுவாரு என்றார். 

என்னை தனுஷ் காதலித்தார்... - வெளிப்படையாக கூறிய பிரபல நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி | Dhanush Aishwarya Broke Up Aishwarya Rajesh