எனது புதிய சென்சார் இயக்கப்பட்டது... ஐஸ்வர்யா வெளியிட்ட பதிவு - குழப்பத்தில் ரசிகர்கள்
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார் .
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
தனுஷை பிரிந்த பிறகு தன்னுடைய பிட்னஸ் குறித்த விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா. ஜிம்மில் வொர்க்கவுட், யோக பயிற்சி, படப்பிடிப்பு தளம் என்று பல புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் ஐஸ்வர்யா பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், எனது புதிய சென்சார் இயக்கப்பட்டது… அடுத்த இரண்டு வாரங்களுக்கு முழு வேகத்தில் கொண்டு வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார். என்ன சென்சார் கொண்டுவரப்போகிறார் ஐஸ்வர்யா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Got my new sensor on …bringing on the next couple of weeks in full throttle @UltrahumanHQ pic.twitter.com/pzc8MMmkhr
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) May 11, 2022