‘உன்னை ரொம்ப நேசிக்கிறேன்...’ - பதிவிட்ட ஐஸ்வர்யா - உருகிய ரசிகர்கள்
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்
. தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர். தனுஷை பிரிந்த பிறகு தன்னுடைய பிட்னஸ் குறித்த விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா. ஜிம்மில் வொர்க்கவுட், யோக பயிற்சி, படப்பிடிப்பு தளம் என்று பல புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் ஐஸ்வர்யா பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்லப் பொம்மை! வேத் குட்டி...பெரிமா உன்னை மிகவும் நேசிக்கிறாள் ! கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக என் லில் குப்ஸ்’ என்று தன்னுடைய தங்கை மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Happy happy birthday my darling doll ! Ved Kutti…Perima loves you so so much ! God bless you my lil kups??? pic.twitter.com/mWzfZdf0W0
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) May 6, 2022