‘ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க...’ கவர்ச்சி உடையில் உடற்பயிற்சி செய்த ஐஸ்வர்யா - ஷாக்கான ரசிகர்கள்

Dhanush Aishwarya Rajinikanth
By Nandhini Apr 24, 2022 11:53 AM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.

தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

தனுஷை பிரிந்த பிறகு தன்னுடைய பிட்னஸ் குறித்த விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா. ஜிம்மில் வொர்க்கவுட், யோக பயிற்சி, படப்பிடிப்பு தளம் என்று பல புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் ஐஸ்வர்யா பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் ஐஸ்வர்யா கவர்ச்சி உடையில் வொர்க்கவுட் செய்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் சிலர் ரசித்தாலும் பெரும்பாலானோர் ஐஸ்வர்யாவை விளாசி வருகின்றனர். கணவர் தனுஷூடன் இருக்கும்வரை ஐஸ்வர்யா பெரும்பாலும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இல்லை. இதுபோல் அதிகமான பதிவுகளை அவர் வெளியிடவும் இல்லை. ஆனால், தனுஷை பிரிந்த பிறகுதான் இவர் இந்தமாதிரியான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் என்று ரசிகர்கள்  விளாசி வருகின்றனர்.