பாவம்... நீங்க.. எப்பவும் இப்படியே இருங்க.... - திடீரென ஐஸ்வர்யா மேல் பாசமழை பொழிந்த ரசிகர்கள் - நடந்தது என்ன?
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
தனுஷை பிரிந்த பிறகு தன்னுடைய பிட்னஸ் குறித்த விஷயங்களில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார் ஐஸ்வர்யா.
ஜிம்மில் வொர்க்கவுட், யோக பயிற்சி, படப்பிடிப்பு தளம் என்று பல புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் ஐஸ்வர்யா பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், தன்னுடைய செல்பி போட்டோவை பகிர்ந்து, இது சிறிது நேரம்.. ஹலோ!" என் கண்களைச் சொல்... வாரத்தின் நடுப்பகுதியில் உள்ள மனநிலை ... குழப்பமான கூந்தல் ... மேக்கப் சான்ஸ் ... கவனத்துடன் கூடிய உணர்ச்சிகள்.. குறிக்கப்பட்ட வேலைத் திட்டம் மற்றும் ஒவ்வொரு நிமிடத்தையும் கணக்கிடுகிறது என்று பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யாவின் இந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் நேச்சுரல் பியூட்டி, எப்பவும் இப்படியே பாசிட்டிவ்வா இருங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.