அதற்காக நான் நிறைய தியாகம் செய்துள்ளேன்... - மனம் திறந்த ஐஸ்வர்யா - வெளியான புது தகவல்
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.
தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐஸ்வர்யாவிடம் பேட்டியில் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அத்தனை கேள்விகளுக்கும் ஐஸ்வர்யா பதில் அளித்துள்ளார்.
அப்பேட்டியில், 7 ஆண்டுகளாக ஏன் வீட்டிலேயே முடங்கிவிட்டீர்கள் என்று ஐஸ்வர்யாவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறுகையில், என் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் அதிக நேரம் செலவிட நான் அதிகம் விரும்பினேன். அதனால் தான் படங்களை இயக்குவதிலிருந்து நான் பிரேக் எடுத்துக் கொண்டேன்.
தற்போது மீண்டும் வேலைக்கு திரும்பி உள்ளேன். இது சந்தோஷமாக உள்ளது. என் பிள்ளைகள் தற்போது வளர்ந்துவிட்டார்கள்.
அதனால் என்னிடம் நிறைய நேரம் உள்ளது என்றார். பிள்ளைகளுக்காக தன் கெரியரை தியாகம் செய்தாரா, இதுவல்லவா தியாகம் என்று ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.