Sunday, Jul 13, 2025

‘தேவையில்லாத பிரச்சினையில் மாட்டிக்காதீங்க...’ - தனுஷுக்கு எச்சரிக்கை விடுத்த ரசிகர்கள்

dhanush aishwarya தனுஷ் ஐஸ்வர்யா broke-up விவாகரத்து
By Nandhini 3 years ago
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.

தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

சமீபத்தில் ஐஸ்வர்யா இயக்கிய ஆல்பம் வெளியானதற்கு யாரும் எதிர்பாராத விதமாக, தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதில் ஐஸ்வர்யாவை தோழி என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தனுஷின் இந்த வாழ்த்து டிவிட்டுக்கு 2 மணி நேரம் கழித்து பதில் கொடுத்த ஐஸ்வர்யா, நன்றி தனுஷ் என்று குறிப்பிட்டார்.

இதனையடுத்து, முதலில் டுவிட்டர் கணக்கில் Aishwaryaa.R.Dhanush என்று இருந்த பெயரை Aishwarya Rajinikanth என்று மாற்றினார். பிறகு, இன்ஸ்டாவிலிருந்தும் தன் பெயருக்கு பின்னால் இருந்த தனுஷ் பெயரை நீக்கிவிட்டு Aishwaryaa Rajinikanth என்று மாற்றியுள்ளார்.

பல ஆண்டுகள் கழித்து தன் அண்ணன் செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். ‘நானே வருவேன்’ படத்தை செல்வராகவன் இயக்குவதுடன், அதில் வில்லனாகவும் நடிக்கிறார். அண்ணனும், தம்பியும் மோதப் போகும் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், தனுஷ் ஒரு நாற்காலியில் கெத்தாக அமர்ந்து புகைப்பிடிப்பது போன்ற போஸ்டரை ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த போஸ்டரில் தனுஷ் வாயில் இருக்கும் சிகரெட்டை பார்த்து, அண்ணா... இந்த போஸ்டர் வேண்டாம்... புகைப்பிடித்தால் அந்த கோஷ்டி கிளம்பி வந்து பிரச்சனை செய்யும். இருக்கிற பிரச்சினை போதும். இல்லையென்றால் தேவையில்லாத பிரச்சினைதான் வந்து சேரும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். 

‘தேவையில்லாத பிரச்சினையில் மாட்டிக்காதீங்க...’ - தனுஷுக்கு எச்சரிக்கை விடுத்த ரசிகர்கள் | Dhanush Aishwarya Broke Up