நீ பிரிந்தாலும்... எப்போவும் எங்கள் ஐஸ்வர்யா தான்... - மீண்டும் தனுஷ் வீட்டிலிருந்து வந்த வாழ்த்து

dhanush aishwarya செல்வராகவன் தனுஷ் ஐஸ்வர்யா broke-up விவாகரத்து
By Nandhini Mar 22, 2022 08:38 AM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.

தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர். படங்களை மட்டுமே இயக்கி வந்த ஐஸ்வர்யா, முதல் முறையாக ‘காதல் பாடல்’ வீடியோவை இயக்கினார்.

அனிருத்தின் இசையில், தமிழில் ‘பயணி’ என்ற தலைப்பில் இப்பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

ஐஸ்வர்யாவின் 'பயணி' ஆல்பம் பாடலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துக்கள் தோழி என பதிவிட்டு அதிர்ச்சி கொடுத்திருந்தார் தனுஷ். அவரின் பதிவிற்கு ஐஸ்வர்யாவும் நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘பயணி’ பாடல் ஆல்பத்தைத் தொடர்ந்து, இந்தி மொழியில் முதன்முறையாக ‘Oh Saathi Chal’ என்ற படத்தை ஐஸ்வர்யா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவல் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து, சமூகவலைத்தளத்தில் ஐஸ்வர்யாவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிந்து வருகின்றனர். இதனையடுத்து, இயக்குனரும், தனுஷின் அண்ணனுமான செல்வராகவனும் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதே போல் அவரது மனைவி கீதாஞ்சலியும் வாழ்த்து கூறியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள ஐஸ்வர்யா, நன்றி குரு என்று செல்வராகவனை குறிப்பிட்டிருக்கிறார்.

என்னதான்... தனுஷைப் பிரிந்து ஐஸ்வர்யா வாழ்ந்தாலும், தனுஷ் வீட்டார் ஐஸ்வர்யாவை விட்டுக்கொடுப்பதாக தெரியவில்லை என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

நீ பிரிந்தாலும்... எப்போவும் எங்கள் ஐஸ்வர்யா தான்... - மீண்டும் தனுஷ் வீட்டிலிருந்து வந்த வாழ்த்து | Dhanush Aishwarya Broke Up