டுவிட்டர் கணக்கிலிருந்து தனுஷ் பெயரை நீக்கிய ஐஸ்வர்யா - அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.
தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.
தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.
இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.
சமீபத்தில் ஐஸ்வர்யா இயக்கிய ஆல்பம் வெளியானதற்கு யாரும் எதிர்பாராத விதமாக, தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதில் ஐஸ்வர்யாவை தோழி என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தனுஷின் இந்த வாழ்த்து டிவிட்டுக்கு 2 மணி நேரம் கழித்து பதில் கொடுத்த ஐஸ்வர்யா, நன்றி தனுஷ் என்ற குறிப்பிட்டார். இந்நிலையில், டுவிட்டர் கணக்கிலிருந்து தன் பெயருக்கு பின்னால் இருந்த தனுஷ் பெயரை இன்று நீக்கியுள்ளார் ஐஸ்வர்யா.
Aishwaryaa.R.Dhanush என்று இருந்த பெயரை Aishwarya Rajinikanth என்று மாற்றியுள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த செயல் தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து மட்டும் இன்னும் தனுஷ் பெயரை அவர் நீக்கவில்லை.
என்ன அண்ணி... அண்ணனுடன் சேர்ந்து வாழ்வீங்கன்னு பார்த்தா... இப்படி பண்ணிட்டீங்களே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.