ஐஸ்வர்யாவின் வெளியான ‘Panayi Song’... - வாழ்த்து கூறுவாரா தனுஷ்? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

song dhanush aishwarya தனுஷ் ஐஸ்வர்யா முசாபிர் ரசிகர்கள் பயணி Payani பாடல்
By Nandhini Mar 17, 2022 12:30 PM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.

தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

படங்களை மட்டுமே இயக்கி வந்த ஐஸ்வர்யா, முதல் முறையாக ‘காதல் பாடல்’ வீடியோவை இயக்கி வந்தார். ‘முசாபிர்’ எனும் அந்த காதல் பாடலின் கதை ஐஸ்வர்யாவின் நிஜ கதையோடு ஒத்துப்போகும் காதல் கதையாம்.

அனிருத்தின் இசை மனதை துளைக்க, ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருந்த தமிழில் ‘பயணி’ என்ற தலைப்பில் இப்பாடல் தற்போது வெளியாகி உள்ளது. வெளியான சில மணி நேரத்திலேயே லைக்குகளை அள்ளிக்கொண்டிருக்கும் இப்பாடலின் வரிகள் நம் மனதை இதமாக்குகின்றன.

இப்பாடலுக்கு ரஜினிகாந்த் மகளுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த்தை தொடர்ந்து சினிமா நட்சத்திரங்களும், ரசிகர்களும் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இப்பாடல் இருக்கும் ஒவ்வொரு வரியும், தனுஷை ஐஸ்வர்யா எவ்வளவு மிஸ் பண்றாங்கன்னு நல்லாவே தெரிகிறது. இப்பாடல் தனுஷிற்கே ஐஸ்வர்யா அர்ப்பணித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

சினிமா நட்சத்திரங்கள் ஐஸ்வர்யாவிற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், காதல் கணவரான தனுஷ், ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவிப்பாரா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.