அந்த பெயரால் ஐஸ்வர்யாவுக்கு வந்த பெரிய சிக்கல் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

dhanush aishwarya தனுஷ் ஐஸ்வர்யா broke-up விவாகரத்து ராகவா லாரன்ஸ்
By Nandhini Mar 14, 2022 08:56 AM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.

தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

அந்த பெயரால் ஐஸ்வர்யாவுக்கு வந்த பெரிய சிக்கல் - வறுத்தெடுத்த நெட்டிசன்கள் | Dhanush Aishwarya Broke Up

படங்களை மட்டுமே இயக்கி வந்த ஐஸ்வர்யா, முதல் முறையாக ‘காதல் பாடல்’ வீடியோவை இயக்கி வருகிறார். ‘முசாபிர்’ எனும் அந்த காதல் பாடலின் கதை ஐஸ்வர்யாவின் நிஜ கதையோடு ஒத்துப்போகும் காதல் கதையாம்.

அனிருத்தின் இசை மனதை துளைக்க, இப்பாடல் எப்போ வெளியாகுமோ என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் ஐஸ்வர்யாவை சந்தித்து பேசி உள்ளார். அப்போது எடுத்துக் கொண்ட படத்தை ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த ராகவா லாரன்ஸோ, வாழ்த்துக்கள் தங்கச்சி. ராகவேந்திரா சாமி எப்பொழுதும் உங்களுடன் இருப்பார் என்று வாழ்த்தியுள்ளார்.

ஆனால், தனுஷ் ரசிகர்கள் சிலரோ, ஐஸ்வர்யாவிடம் என் அண்ணன் தனுஷையே வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள். இதுக்கப்புறம் உங்கள் இன்ஸ்டா பக்கத்தில் இருக்கும் Dhanush மட்டும் நீக்காமல் அப்படியே வச்சுக்கிட்டிருக்கீங்க.. அதையும் நீக்கிவிடுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்னும் சிலரோ, ஐஸ்வர்யாவை பாராட்டாமல் இப்படி ஏன் திட்டி விமர்சிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.