ஐஸ்வர்யாவின் புது காதலுக்கு வாழ்த்து சொன்ன சவுந்தர்யா - ஷாக்கான ரசிகர்கள்

dhanush aishwarya album தனுஷ் ஐஸ்வர்யா broke-up சவுந்தர்யா Payani - Teaser ஆல்பம் புது காதல்
By Nandhini Mar 09, 2022 07:44 AM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார்.

ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார். இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

படங்களை மட்டுமே இயக்கி வந்த ஐஸ்வர்யா, முதல் முறையாக ‘காதல் பாடல்’ வீடியோவை இயக்கி வருகிறார். ‘முசாபிர்’ எனும் அந்த காதல் பாடலின் கதை ஐஸ்வர்யாவின் நிஜ கதையோடு ஒத்துப்போகும் காதல் கதையாம்.

இந்நிலையில், ‘முசாபிர்’ பாடலின் 2-வது நாள் ஷூட்டிங் நடந்து வருகிறது. அப்போ, எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா. 

அனிருத்தின் இசை மனதை துளைக்க, இப்பாடல் எப்போ வெளியாகுமோ என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், மகளிர் தினமான நேற்று ஆல்பம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் ஆல்பம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, ஐஸ்வர்யாவின் தங்கை சவுந்தர்யா, தனது டுவிட்டர் பக்கத்தில், முசாஃபிர் ஆல்பத்தின் தமிழ் ப்ரமோவை நேற்றிரவு வெளியிட்டிருக்கிறார்.

மேலும், விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள சிங்கிள் ட்ராக்கிற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார் சவுந்தர்யா.

இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அண்ணி... அண்ணனுடன் சேர்ந்துடுங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.