ஐஸ்வர்யாவின் காதல் வீடியோவில் தனுஷ் - சந்தோஷத்தில் துள்ளி குதித்த ரசிகர்கள்

divorce dhanush aishwarya தனுஷ் ஐஸ்வர்யா broke-up விவாகரத்து பிரிவு முசாபிர் காதல் வீடியோ
By Nandhini Mar 03, 2022 09:08 AM GMT
Report

சமீபத்தில் நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.

தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார். தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது ஐஸ்வர்யா இயக்கி வரும் முசாபிர் என்ற காதல் பாடல் வீடியோவில் தனுஷுக்கும் தொடர்பு இருக்கிறதாம். காதல் கணவரான தனுஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா.

இந்நிலையில், ‘முசாபிர்’ விரைவில் வெளியாகப் போவதாக ஒரு போஸ்டரை இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் சாலையின் நடுவே ஒரு இரு சக்கர வாகனம் நிற்கிறது. அதை பார்த்ததுமே ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ் ஓட்டிய அந்த அதிசய இரு சக்கர வாகனம் தான் ரசிகர்கள் அனைவருக்குமே நினைவிற்கு வந்துள்ளது.

தனுஷை விட்டுப் பிரிந்தாலும் முசாபிரில் அவரை கொண்டு வந்திருக்கிறார் ஐஸ்வர்யா என்று ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

முசாபிர் தொடர்பான வீடியோக்கள், போஸ்டரில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று பெயர் இருந்தாலும், இந்த இரு சக்கர வாகனம் ஒன்று போதும் அண்ணி... சீக்கிரம் தனுஷ் அண்ணாவுடன் சேர்ந்து விடுங்க என்று ரசிகர்கள் ஏகத்தோடு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும், நண்பர்களும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் சமீபத்தில் பார்ட்டி ஒன்றில் சந்தித்துக் கொண்ட தனுஷும், ஐஸ்வர்யாவும் பார்த்தும், பார்க்காதது போல் சென்றது ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.