‘வெயிட் பண்ணு... கொஞ்ச நாளைக்கு எனக்கு போன் செய்யாதே...’ - பிரபல நடிகையிடம் தனுஷ்?
கடந்த மாதம் நடிகர் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக சமூகவலைத்தளத்தில் அறிவிப்பை வெளியிட்டனர்.
காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் 18 வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் பிரிவதாக அறிவித்த விஷயம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இருந்தாலும், இவர்களை ஒன்று சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினி மற்றும் கஸ்தூரி ராஜா ஈடுபட்டு வருகிறார்கள். தனுஷ் சில நடிகைகளுடன் நெருங்கி பழகியதே இவர்களின் விவகாரத்திற்கு காரணம் என்று சமூகவலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதாவது, தனுஷின் தயாரிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஒரு படத்தில் நடித்த நடிகை தனுஷிற்கு போன் செய்து விடாமல் துரத்திக்கொண்டு வருகிறாராம்.
அந்த நடிகையின் விவாகரத்திற்கு தனுஷும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில், அந்த நடிகை தனுஷிடம் நெருக்கம் காட்டுவதை விடவே இல்லையாம்.
தற்போது தனுஷிற்கு விவகாரத்தானதால் அவருக்கு ஆறுதலாக இருக்கவேண்டும் என்று அந்த நடிகை அடிக்கடி போன் செய்து பேசி வருகிறாராம். ஆனால், தனுஷ் அந்த நடிகை போன் வந்தாலே பதறிப்போய் விடுகிறாராம்.
பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கையில், இது வேற புது பிரச்சனையாகிவிடும் என்பதற்காக அந்த நடிகையின் போனை தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது தனுஷ் இப்பிரச்சனைகளிலிருந்து தன்னை திசைதிருப்ப படங்களில் முழுக்கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.