18 வருட திருமண வாழ்க்கை வீணாக கூடாது - ப்ளீஸ் இதுலாம் வேணாம்... - டுவிட் செய்த பிரபலம்

dhanush aishwarya broke up
By Nandhini Jan 18, 2022 07:18 AM GMT
Report

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித்தந்த பிரபலங்களில் ஒருவர். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என எல்லா மொழிகளிலும் படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் சமீபத்தில் ஹிந்தியில் அத்ரங்கி ரே என்ற திரைப்படம் வெளியாகி பட்டய கிளப்பியது.

இந்த நேரத்தில் தான் நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டார்.

அதைப்பார்த்ததும் எல்லோருக்கும் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது, இப்போதும் அவர்கள் பிரிய கூடாது என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

காமெடி நடிகை ஆர்த்தியும் தனது டுவிட்டர் பக்கத்தில், உங்களது 18 வருட திருமண வாழ்க்கை வீணாக கூடாது, எல்லா கருத்து வேறுபாடுகளும் விவாகரத்தில் தான் முடியும் என்பது உண்மை அல்ல.

இந்த சின்ன பிரிவும் உங்களை நீங்கள் ஆராய்ந்து, விட்டு கொடுத்து, உங்கள் குழந்தைகளுக்காக இருவரது பாதையும் வெவ்வேறாக ஆகாமல் ஒன்றாகும் என்று நம்புகிறேன். இறைவனை வேண்டுகிறேன் என பதிவு செய்துள்ளார்.