சமந்தாவால்தான் தனுஷ்-ஐஸ்வர்யா பிரிந்தார்களா? - வெளியாகும் அதிர்ச்சி தகவல்

Dhanush Samantha trending Aishwarya cinema news Broke up
By Nandhini Jan 18, 2022 03:44 AM GMT
Report

தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இதற்கு என்ன காரணம் என பல விதமான தகவல்கள் வெளியாகி சோஷியல் மீடியாவை அதிர வைத்து வருகின்றன.

தனுஷிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தாங்கள் பிரிவு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், புரிந்து கொள்ள தங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை எனவும் இருவரும் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என பல விதமான தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தான் இருவருக்கு இடையே பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தங்கமகன் படத்திற்கு பிறகு சமந்தாவுடன், தனுஷ் நெருக்கம் காட்டி வருவதாகவும், அதனால் ஐஸ்வர்யா - தனுஷ் இடையே மனகசப்பு உருவாகியதாகவும் கூறப்படுகிறது.

சமந்தா - நாகசைதன்யா விவகாரத்து சமயத்திலும் அதன் பின்னணியில் தனுஷ் இருப்பதாக சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது. அதோடு சமீபத்தில் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, சமீபத்தில் நடிகர் சிம்புவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்கு வாழ்த்து கூறி இருந்தார். ஏற்கனவே சிம்புவும், ரஜினியின் மகளும் காதலித்து வந்ததாக ஒரு வதந்தி பரவியது.

சிம்புவுடனான காதல் முறிந்த பிறகு தான் ஐஸ்வர்யா, தனுஷ் திருமணம் நடைபெற்றதாகவும், ரஜினி மகளை திருமணம் செய்ய போகிறார் என்ற காரணத்தால் தான் ஆரம்பத்தில் சிம்பு, லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த விவகாரம் சமீபத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது தான் தற்போதைய விவாகரத்து முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. எது எப்படியோ இந்த வதந்திக்கு அவர்கள் தான் முற்று புள்ளி வைக்க வேண்டும்.