மிகப்பெரிய நடிகரிடமிருந்து ஐஸ்வர்யாவிற்கு வந்த வாழ்த்துச் செய்தி - சந்தோஷத்தில் துள்ளி குதித்த ஐஸ்வர்யா

twitter wishes dhanush aishwarya Amitabh Bachchan
By Nandhini Mar 23, 2022 04:57 AM GMT
Report

நடிகர் தனுஷிம், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்து செல்வதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இந்த அறிவிப்பால், ஒட்டுமொத்த சினிமாத்துறையும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட நடிகர் ரஜினிகாந்த், யாரிடம் பேசாமல் வீட்டை விட்டு வெளியே சென்றார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். தந்தையிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய ஐஸ்வர்யாவை தீட்டித் தீர்த்துவிட்டார்.

தந்தையின் கோபத்தை கண்டு மிரண்டு போன ஐஸ்வர்யா, கணவர் தனுஷுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். ஆனால், நடிகர் தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கறாரா தெரிவித்து விட்டார்.

இதனையடுத்து, இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களும், நண்பர்களும் இவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

படங்களை மட்டுமே இயக்கி வந்த ஐஸ்வர்யா, முதல் முறையாக ‘காதல் பாடல்’ வீடியோவை இயக்கினார். சமீபத்தில் அனிருத்தின் இசையில், தமிழில் ‘பயணி’ பாடலை வெளியிட்டார்.

இப்பாடல் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவியது. ஐஸ்வர்யாவிற்கு பலர் வாழ்த்து மழையில் நனைய வைத்தார்கள்.

இந்நிலையில், தற்போது ஐஸ்வர்யாவின் 'முசாபிர்' இந்திப்பாடல் வெளியாகி உள்ளது. இதில் தமிழ், மலையாளம், தெலுங்கில் நடித்த நடிகர் அல்லாமல் ஷிவன் என்ற புது ஹீரோ நடித்திருக்கிறார்.

இந்த வீடியோவை பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இந்த வாழ்த்துச் செய்தியால் ஐஸ்வர்யா மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளார்.

நடிகர் அமிதாப் பச்சன் வாழ்த்திற்கு ஐஸ்வர்யா தனது டுவிட்டர் பக்கத்தில். I love you uncle ???always need your blessings!என்று பதிவிட்டுள்ளார்.