முதலமைச்சராகும் நடிகர் தனுஷ் - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றில் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் கடந்த ஜனவரி மாதம் தன் மனைவி ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிவித்தார். இவர்களின் அறிவிப்பு ரசிகர் மத்தியிலும்,குடும்பத்தினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலலுத்தி வருகிறார். அந்த வகையில் அரசியல் கதை கொண்ட லீடர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்க உள்ளார்.
தி கிரே மேன் திரைப்படம் வரும் ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. நடிகர் தனுஷ், திருச்சிற்றம்பலம், வாத்தி மற்றும் நானே வருவேன் ஆகிய படங்களை தனுஷ் கைவசம் வைத்துள்ளார்.
லீடர் திரைப்படத்தை தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்க உள்ளார்.இந்த திரைப்படம் த்ரில்லராக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இத்திரைப்படம் இயக்கப்பட உள்ளது. இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்,நடிகைகள் குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. லீடர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் முதலமைச்சர் வேடத்தில் நடிக்க உள்ளார்.
ஏற்கனவே நடிகர் தனுஷ் கொடி படத்தில் அரசியல்வாதியாக நடித்து வந்த நிலையில் மீண்டும் மற்றொரு அரசியல் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தீப்பிழம்புடன் விடுதிக்குள் புகுந்த விமானம்: கிடைத்தது கருப்பு பெட்டி - ஆரம்பமாகும் விசாரணை IBC Tamil

viral video: கொடிய விஷம் கொண்ட Gaboon Viper பாம்பிடம் சேட்டை செய்த நபர்... இறுதியில் என்ன நடந்தது? Manithan
