பூஜையுடன் தொடங்கியது தனுஷின் புதிய படம் - உற்சாகத்தில் ரசிகர்கள்

sun pictures Actor dhanush Thiruchitrambalam
By Petchi Avudaiappan Aug 05, 2021 05:22 PM GMT
Report

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கு 'திருச்சிற்றம்பலம்' என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பன்முக கலைஞராக வலம் வரும் நடிகர் தனுஷ் தனது 44 வது படத்தில் மித்ரன் ஆர்.ஜவஹர் உடன் பணிபுரிய உள்ளார். யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமப்புத்திரன் ஆகிய படங்களுக்குப் பிறகு இந்த கூட்டணி 4வது முறையாக இணைய உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன்மூலம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனுஷ்- அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.