ஐஸ்வர்யாவுக்கு முன்னால் தனுஷ் காதலித்தது இவரையா? - உச்சக்கட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகர் தனுஷ் தனது முதல் காதல் குறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 18 ஆண்டுகள் கழிந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்தனர். இந்த சம்பவம் ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே நேர்காணல் ஒன்றின் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் தனுஷிடம் ’நீங்கள் படிக்கும் போது நன்றாக படிப்பவரா? இல்லை சுமாராக படிப்பவரா?’ என கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் தான் 10 ஆம் வகுப்பு வரை நன்றாக படித்ததாகவும், 11 ஆம் வகுப்பு படித்த போது காதலில் விழுந்ததால் படிப்பை கோட்டை விட்டதாகவும் தெரிவிக்கிறார்.
மேலும் அப்பெண்ணுடன் எந்த நேரமும் போன் பேசுவேன். என் முழுக்கவனமும் அவர் மேல் இருந்ததால் படிப்பில் நாட்டம் குறைந்ததாகவும் தனுஷ் கூறுகிறார். அதேசமயம் லெட்டர் மற்றும் இமெயில் மூலமாக பேசுவோம் என்றும், முதல் காதல் என்றுமே ஸ்பெஷல் தான் எனவும் தனுஷ் தெரிவிக்கிறார்.
பின் 11 ஆம் வகுப்பு படித்த போது துள்ளுவதோ இளமை படத்தில் நடிக்க வந்து பின் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாறியது ஊர் அறிந்த கதையாகும்.
You May Like This