நாங்க... கொலை செய்ய முயன்றோமா... மன்னிப்பு கேட்காவிட்டால் 10 கோடி தர வேண்டும் - தனுஷ் ஆவேசம் - ரசிகர்கள் ஷாக்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் திடீரென மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். நடிகர் தனுஷ் என் மகன் என்றும், ஒரு சில போட்டோக்களை ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர்.
இந்தப் பேட்டியால் சினிமாத்துறை மட்டுமல்லாமல், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக்கிளை இவ்வழக்கை ரத்து செய்துவிட்டது.
இதனையடுத்து, நடிகர் தனுஷ் தங்களை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து நீதிமன்ற உத்தரவை பெற்று விட்டதாகவும் கதிரேசன் மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுசுக்கும் அவரது தந்தை கஸ்தூரி ராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பினார்கள்.
இந்நிலையில், கதிரேசன் - மீனாட்சி தம்பதிகள் கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என்று தனுஷ் மற்றும் கஸ்தூரி ராஜா சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள். இவர்கள் அனுப்பி இந்த நோட்டீஸ் விவகாரம் பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.