கிரிக்கெட் வீரர் சஹாலின் மனைவி இவரா? - இணையத்தை கலக்கும் வீடியோ
ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனைப் படைத்த ராஜஸ்தான் வீரர் யுஸ்வேந்திர சஹாலின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 30வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி பட்லர் அதிரடியால் 217 ரன்கள் குவித்தது.
2வதாக பேட்டிங் செய்த கொல்கத்தா அணி வெற்றிக்கு மிக அருகில் சென்ற நிலையில் 17வது ஓவரை வீசிய யுஸ்வேந்திர சஹால் அந்த ஒரே ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் , கம்மின்ஸ் , மாவி விக்கெட்களை (ஹாட்ரிக்) வீழ்த்தி போட்டியை ராஜஸ்தான் பக்கம் திருப்பினார். இதனால் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அபாரமாக பந்து வீசிய சஹால் 5 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான ஊதா நிற தொப்பியை அவர் பெற்றார். இதனிடையே இந்த போட்டியை காண சாஹல் மனைவியும் நடன இயக்குனருமான தனஸ்ரீ வர்மா நேரில் வந்து இருந்தார். இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு சஹால் அவரின் மனைவியிடம் உரையாடும் வீடியோவை ராஜஸ்தான் அணி நிர்வாகம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
அதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சியா என தனஸ்ரீ வர்மா கேட்க, "அதற்கு சாஹல் "ஆம் , முதல் ஹாட்ரிக் " என புன்னைகையுடன் தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Yuzi khush, Bhabhi khush aur hum bhi khush. Truly a “hat-trick day” ??#Royalsfamily | @yuzi_chahal pic.twitter.com/swkKSiUr3E
— Rajasthan Royals (@rajasthanroyals) April 18, 2022