சாஹலுடன் விவாகரத்து; என்ன காரணம் - உடைந்து பேசிய தனஸ்ரீ!

Yuzvendra Chahal Divorce
By Sumathi Aug 20, 2025 09:19 AM GMT
Report

சாஹலுடனான விவாகரத்து குறித்து முதல் முறையாக தனஸ்ரீ மனம் திறந்துள்ளார்.

சாஹலுடன் விவாகரத்து

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல். பிரபல நடன கலைஞரான தனஸ்ரீ வர்மாவை கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார்.

chahal-dhanashree

இந்நிலையில், திடீரென விவகாரத்து செய்துக்கொண்டனர். தொடர்ந்து, சாஹல் தனஸ்ரீ வர்மாவுக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கினார். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதன்பின், சாஹல் ரசிகர்கள் தனஸ்ரீ வர்மாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுவரை விவாகரத்து குறித்து வாய் திறக்காமல் இருந்த தனஸ்ரீ வர்மா, அவர், தனிப்பட்ட வாழ்க்கை என்று நாம் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

ஆர்சிபி கோப்பையை வெல்ல காரணமே இதுதான் - போட்டுடைத்த புவனேஷ்வர்!

ஆர்சிபி கோப்பையை வெல்ல காரணமே இதுதான் - போட்டுடைத்த புவனேஷ்வர்!

தனஸ்ரீ தகவல்

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒரு கை ஓசை தராது. நான் ஒரு விஷயத்தை பற்றி எதுவும் பேசவில்லை என்பதற்காக பலரும் அவர்களுக்கு தெரியாத விஷயம் குறித்து பேசுவது சரியல்ல. சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் எனக்கு மட்டுமல்ல, யாருக்குமே நடக்கக்கூடாது.

சாஹலுடன் விவாகரத்து; என்ன காரணம் - உடைந்து பேசிய தனஸ்ரீ! | Dhanashree Verma About Divorce With Chahal

வாழ்க்கையில் ஒரு விஷயத்தில் இருந்து வெளியே வந்து பெரிய விஷயங்களை சாதிக்க நினைத்தால், அதை மீண்டும் பேசத் தேவையில்லை. என் பக்கம் நியாயம் இருக்கிறது. மேலும், விவாகரத்து என்பது கொண்டாட வேண்டிய ஒன்றல்ல.

அதே சமயம் இது இரண்டு நபர்களை பற்றியது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட குடும்பகளை பற்றியது. திருமண வாழ்க்கை அன்புடன் தொடங்குகிறது. ஆனால் அது முடியும்போது, பெரும்பாலும் அவநம்பிக்கையை தருகிறது.

நாங்கள் மனதளவில் விவாகரத்திற்கு தயாராக இருந்தாலும், தீர்ப்பு வழங்கப்பட்டபோது, நான் முற்றிலும் உடைந்து போனேன். நான் எல்லோர் முன்னிலையிலும் அழ ஆரம்பித்தேன். அந்த நாள் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது என தெரிவித்துள்ளார்.