அதிமுகவில் மரியாதை இல்லை! முன்னாள் சபாநாயகர் மகன் குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இளைஞர்கள் வாக்கை தமிழக வெற்றி கழகம் பிரிக்கக்கூடும் என பேசப்படுகிறது, தவெக-வுக்கு அரசியல் அனுபவம் இல்லை, மக்களை எப்படி கையாள வேண்டும் என்று கூற தெரியவில்லை என விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் நேற்று, அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார்.

இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது தந்தை போன்ற மூத்தவர்களுக்கு அதிமுகவில் மரியாதை கிடையாது, சமீபத்தில் தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது கூட கட்சி தலைமை நிர்வாகிகள் யாரும் தந்தையை சந்திக்கவில்லை, அதனால் மன வருத்தம் இருந்தது.
சிறு வயதில் இருந்தே விஜய் ரசிகன் நான். தனது தந்தை தனபால் நிர்பந்தத்தினால் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதில் தாமதமாக இருந்தது என தெரிவித்தார்.
அதிமுகவைச் சேர்ந்த தனபால் கடந்த, 2016 ஆண்டு அதிமுக ஆட்சியின் போது சபாநாயகராகப் பதவி வகித்திருந்தார். தொடர்ந்து, தற்போது அவிநாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
