பளார்ன்னு தனலட்சுமி அடி வாங்குவார்... கமல் முன்பு அசீம் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போட்டியாளர்கள்...!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரொமோவில் தனலட்சுமி கமல் முன்பு அசிங்கப்பட்டுள்ளார்.
கமல் முன்பு அசிங்கப்பட்ட தனலட்சுமி
கமல் முன்பு போட்டியாளர்கள் ஒரு வாசகம் பொருந்திய லிஸ்ட்டை அசீம் படிக்கிறார். அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் தனலட்சுமி செய்யும் செயல் வெளியே சென்று அதையே செய்தால் அடிதான் வாங்குவார் என்று வாசகத்திற்கு ஆம் என்றும் இல்லை என்றும் தங்கள் கருத்துக்களை சக போட்டியாளர்கள் கூற வேண்டும் என்று பிக்பாஸ் கூறியுள்ளார்.
கமல் முன் பிக்பாஸில் தனலட்சுமியிடம் கேட்கப்பட்ட கேள்வியால் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் என் மனதில் என்ன இருந்ததோ அதையே பிக்பாஸ் கேட்டுள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.