எனக்கு அசிங்கமா இருக்கு.... நான் திருடலை... - பிக்பாஸிடம் தேம்பி... தேம்பி... கதறி அழுத தனலட்சுமி...!

Viral Video Bigg Boss
By Nandhini Nov 14, 2022 10:42 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

ரசிகர்களின் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்புடன் சென்றுக்கொண்டிருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

கமல் முன்பு அசிங்கப்பட்ட தனலட்சுமி

நடந்த வார இறுதியில் கமல் முன்பு போட்டியாளர்கள் ஒரு வாசகம் பொருந்திய லிஸ்ட்டை அசீம் படித்தார்.

அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் தனலட்சுமி செய்யும் செயல் வெளியே சென்று அதையே செய்தால் அடிதான் வாங்குவார் என்று வாசகத்திற்கு ஆம் என்றும் இல்லை என்றும் தங்கள் கருத்துக்களை சக போட்டியாளர்கள் கூற வேண்டும் என்று பிக்பாஸ் கூறினார்.

கமல் முன் பிக்பாஸில் தனலட்சுமியிடம் கேட்கப்பட்ட கேள்வியால் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, பேசிய கமல், தனலட்சுமி செய்த தவற்றை சுட்டிக்காட்டி கடுமையாக பேசினார். அப்போது, கமல் எதிரில் தனலட்சுமி அழுதார்.

dhanalakshmi-bigboss-viral-video

பிக்பாஸிடம் கதறி அழுத தனலட்சுமி

இந்நிலையில், இன்றைக்கான ப்ரொமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரொமோவில் தனலட்சுமி பிக்பாஸிடம் நான் திருடலை.. நான் இடத்திற்கு கஷ்டப்பட்டு வந்திருக்கிறேன். என்னை விட்டுவிடுங்கள்... என்று கதறி தேம்பி, தேம்பி அழுதுள்ளார்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தயவு செய்து அழாதே தனலட்சுமி... நீங்க ரொம்ப நல்ல ப்ளேயர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ நல்ல நாடகம் ஆடுகிறாள் தனலட்சுமி என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.