விண்ணை தீண்டும் கதிரவன் எந்த எல்லை தாண்டும் காற்றிவன்: அதிரடி காட்டும் டிஜிபி சைலேந்திர பாபு

rewards dgpsylendrababu cops
By Irumporai Sep 30, 2021 08:16 AM GMT
Report

தமிழகம் முழுவதும் ஆயுத தயாரிப்பை கண்காணிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றதில் இருந்து சைலேந்திரபாபு அவர்கள்,பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில்,தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை சம்வங்கள் தொடந்து அதிகரித்து வருவதை தடுக்க கடந்த சில நாட்களாக இரவோடு இரவாக தமிழ்நாடு போலீசார் முக்கியமான ஆபரேஷனை செய்துள்ளனர்.

அதாவது,டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ரவுடிகளின் அராஜகத்தை ஒலிக்க கடந்த ஒரு வாரமாக போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர்.

அதன்படி, சென்னை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தேனி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு,கொலை,கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் ஆயுத தயாரிப்பை கண்காணிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக,காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"முன்விரோத கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட "ஆப்பரேஷன் டிஸ்ஆர்ம் - Operation Disarm" என்னும் தேடுதல் வேட்டையில் சுமார் 3,325 கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, கொலைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் 1,110 கத்திகள் மற்றும் 7 கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கத்தி, வீச்சரிவாள் போன்றவற்றை தயார் செய்யும் உரிமையாளர்கள் மற்றும் விற்பளையாளர்கள் அனைவரையும் காவல் நிலைய உட்கோட்ட அளவில் அழைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டது. இவ்வாறு மொத்தம் 579 கூட்டங்கள் நடத்தப்பட்டதில் 2,548 நபர்கள் கலந்துகொண்டு காவல் துறைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கத்தி, வாள், வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்கவும். இதுபோன்ற ஆயுதங்களை தவறானவர்கள் கைகளுக்கு செல்வதைக் கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அவர்கள் காவல் ஆணையாளர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கீழ்காணும் நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள் தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண், எந்த காரணத்திற்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

விவசாயம் வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது. கண்காணிப்பு கேமராக்களை கடை மற்றும் பட்டறைகளில் பொருத்தப்பட வேண்டும்.

விண்ணை தீண்டும் கதிரவன் எந்த எல்லை தாண்டும் காற்றிவன்: அதிரடி காட்டும்  டிஜிபி சைலேந்திர பாபு | Dgp Sylendra Babu Rewards Cops For Stopping

கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டால் காவல் துறை உதவி செய்ய வேண்டும். குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும்.என டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக,மதுரையில் நெல்பேட்டை, ஒத்தக்கடை, வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணைக் கண்டிப்பாக வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.