வதந்தி பரப்பியவர்களை கைது செய்து பிடிக்க தனிப்படை அமைப்பு - டிஜிபி சைலேந்திர பாபு

Chennai Tamil Nadu Police
By Thahir Mar 04, 2023 09:34 AM GMT
Report

வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறான செய்தி பரப்பிய 4 பேரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி கூறியுள்ளார்.

டிஜிபி கடும் எச்சரிக்கை 

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டன.

இது குறித்து பேசிய தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, இது வேறு மாநிலத்தில் நடந்த பழைய வீடியோ என்றும் தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்கள் பாதுகாப்பாகவே பணிபுரிந்து வருகின்றனர்.

DGP Shailendra Babu issued a stern warning

மேலும் இது போன்ற தவறான செய்தி பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

4 தனிப்படைகள் அமைப்பு 

தற்போது இந்த தவறான செய்தியை பரப்பிய 4 பேர் பேரைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும் இதற்காக புகார் தெரிவிக்க சிறப்பு ஹெல்ப்லைன் எண்கள் அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் குவிந்த வெளிமாநிலத்தவர்கள் ஊருக்கு செல்வது, அவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்கு செல்கின்றனர் என்றும் அச்சத்தினால் அவர்கள் ஊருக்கு செல்லவில்லை என்றும் டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் கூறியுள்ளார்.