ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
அதிகாரிகள் வீடுகளில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கும் ஆடர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
ஆர்டர்லி முறை ஒழிப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில், சென்னை நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.
உத்தரவை செயல்படுத்தாத காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, நேற்று ஆடர்லி முறை ஒழிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆங்கிலேயே ஆடர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது. ஆடர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசு மற்றும் டிஜிபியிடம் இருந்து அது வருவதில்லை என நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் கூறியிருந்தார்.
ஆடர்லி பயன்படுத்தும் காவல் உயரதிகாரிகளை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை உண்டு. ஆடர்லிகள் விவகாரத்தில் முதல்வரின் எச்சரிக்கை மட்டும் போதாது, உரிய நடவடிக்கை தேவை என்று கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது தேவையில்லாத ஆடர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.