ஓஎல்எக்ஸ் விளம்பரத்தை பார்த்து பணத்தை பறிகொடுத்த டிஜிபியின் வாகன ஓட்டுநர் - அதிர்ச்சி சம்பவம்

chennai OLX dgpcardriver
By Petchi Avudaiappan Mar 19, 2022 09:40 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னையில் குற்றப்புலனாய்வு துறை டிஜிபிக்கு வாகன ஓட்டுனராக பணிபுரியும் நபர் ஓஎல்எக்ஸ் விளம்பரத்தைப் பார்த்து பணத்தை ஏமாந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மயிலாப்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் சுந்தர்ராஜா என்பவர் ஆயுதப்படை காவலரான இவர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டிஜிபிக்கு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இதனிடையே கடந்த 14 ஆம் தேதி சுந்தர்ராஜா ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் செல்போனை வாங்க தேடிய போது, 3 ஐபோன் ரூ.11,700- க்கு விற்பதாக விளம்பரம் ஒன்று வந்ததுள்ளது.

இதனை கண்ட சுந்தர்ராஜா விளம்பரம் பதிவிட்ட நபரை தொடர்பு கொண்டு பேசிய போது, பணத்தை அனுப்பியுடன் அடுத்த நாள் செல்போனை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய காவலர் சுந்தர்ராஜா அவரது வங்கி கணக்கிற்கு ரூ. 11,700 பணம் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து பல நாட்களாக செல்போன் டெலிவரி செய்யப்படாததால் சுந்தர்ராஜா அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆகி இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் சூளைமேடு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சூளைமேடு போலீசார் மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மோசடி நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து தேடிய போது சூளைமேடு திருவள்ளூவர் புரம் பகுதியில் தங்கியுள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.