கோவையில் காவல்துறையினருடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை

Coimbatore Tamil Nadu Police
By Thahir Oct 27, 2022 10:16 AM GMT
Report

கோவையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்து கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார்.

கார் வெடிப்பு சம்பவம் 

பின்னர் நடந்த விசாரணையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மீண்டும் அஃப்சர் கான் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தமிழக காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அமைப்பு விசாரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.

டிஜிபி ஆலோசனை 

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கோவையில் காவல்துறையினருடன் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை | Dgp C Sylendra Babu Meet The District Police

இந்த நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து காவல்துறை உயர்அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.