போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது : டிஜிபி சைலேந்திர பாபு புதிய அறிக்கை

By Irumporai Dec 05, 2022 05:13 AM GMT
Report

போக்சோ வழக்கு தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திர பாபு புதிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் படி :

டிஜிபி அறிக்கை

திருமண உறவு, காதல் உறவு போன்ற 'போக்சோ' வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக சம்மன் அனுப்பி எதிரிகள், எதிர்மனுதாரரை விசாரணை செய்யலாம்.

குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரம் வழக்கு கோப்பில் பதிவு செய்தும், அதற்கான காரணத்தையும் பதிவு செய்ய வேண்டும். ]

போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது : டிஜிபி சைலேந்திர பாபு புதிய அறிக்கை | Dgp Arrests In Pocso Cases

குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிலை அதிகாரிகளின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.

முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு

குறிப்பாக, மேல் நடவடிக்கை கைவிடும் வழக்குகளில் கோப்பினை தீவிரமாக ஆய்வு செய்து உரிய அறிவுரைகள் வழங்க வேண்டும்.

இந்த அறிவுரைகளை போலிஸ் கமிஷ்னர்கள் , மாவட்ட சூப்பிரண்டுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.