மதுரையில் நாளை வைகையாற்றில் இறங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

மதுரை கள்ளழகர் சித்திரைதிருவிழா வைகைஆறு அனுமதிஇல்லை
By Swetha Subash Apr 15, 2022 07:33 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொங்கியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றால் பக்தர்கள் அனுமதியின்றி கோவிலின் உட்புறம் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து சித்திரை திருவிழா கோலகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் ஒரு நாள் முன்னதாகவே மதுரை வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதுரையில் நாளை வைகையாற்றில் இறங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை | Devotees Restricted To Step Into Vaigai River Tomo

நாளை காலை 5.50 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் சுமார் 10லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு நின்று அழகரை தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்த நிலையில், 

கடந்த சில நாட்களாக அங்கு மழை பெய்து வருவதால் அதிகளவு தண்ணீர் வருவதால் மதுரையில் நாளை வைகையாற்றில் இறங்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.