திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் நீராட தடை!

Tamil Nadu Police Department of Meteorology TN Weather
By Thahir Nov 14, 2023 10:36 AM GMT
Report

கந்தசஷ்டி விழா நடைபெற்று வரும் நிலையில், திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் பக்தர்கள் யாரும் குளிக்க தடை

தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் காற்றின் வேகமும் அலையின் வேகமும் அதிகமாக உள்ளது. இதனால் கோயில் கடற்கரையில் பக்தர்கள் யாரும் குளிக்க வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் நீராட தடை! | Devotees Prohibited From Swim Tiruchendur Beach

கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருவதால் திருச்செந்தூர் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க தடை விதித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு 

அதுமட்டும் இல்லாமல், பக்தர்களின் பாதுகாப்பிற்காக தமிழக வருவாய் துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பக்தர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர், தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு படைகள் பிரிவு, தமிழக காவல்துறையினர் ஆகியோர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலுக்கு செல்லாதவாறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.