கால் வலியால் அவதிப்பட்ட யானை : காலணி செய்து வழங்கிய பக்தர்கள்

Tamil nadu Viral Photos
By Irumporai Jul 03, 2022 03:49 AM GMT
Report

திருநெல்வேலி மாநகர் பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள யானை காந்திமதி தனது 13 வயதில் கோவிலுக்கு வந்த நிலையில் தற்பொழுது 53 வயதாகிறது.

யானைக்கு காலணி

சில ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் கோவில் யானை காந்திமதியை பரிசோதனை செய்த பொழுது யானையின் உடல் எடை அதன் அளவிற்கு மீறி இருப்பதால் 300 கிலோ எடையைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தனர்.

கால் வலியால் அவதிப்பட்ட யானை :  காலணி செய்து வழங்கிய பக்தர்கள் | Devotees Made Special Shoes Temple Elephant

காந்திமதிக்கு வந்த சிறப்பு காலணிகள்

அதன்படி கடந்த ஆறு மாதங்களாக கோவில் யானை வாக்கிங் அழைத்துச் செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆறு மாதங்களில் யானையின் எடையில் 150 கிலோ குறைந்தது. ஆனால் வயது முதிர்வின் காரணமாக யானைக்கு மூட்டு தேய்மானம் ஏற்பட்டு மூட்டு வலி ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்தது.

இந்நிலையில் பக்தர்கள் மூட்டு வலி போவதற்காக 12,000 ரூபாய் மதிப்பில் இரண்டு ஜோடி சிறப்பு காலணி செய்து கோயில் யானை காந்திமதிக்கு வழங்கி உள்ளனர்.