இன்று மகர விளக்கு பூஜை - மகர ஜோதியை காண சபரிமலையில் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்

Kerala Sabarimala
By Thahir Jan 14, 2023 04:17 AM GMT
Report

சபரிமலையில் இன்று மாலை நமைபெற உள்ள நிலையில், மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இன்று மகர விளக்கு பூஜை 

மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந் தேதி சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.

ஐயப்பனை தரிசிக்க மண்டல பூஜை நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் இருப்பதை போல் மகர விளக்கு கூட்டம் இருந்ததை போல் மகர விளக்கு காலத்திலும் கூட்டம் அலைமோதியது.

Devotees flock to Sabarimala to see Makara Jyoti

இந்த நிலையில் சிகர நிகழ்ச்சியாக மகரவிளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனம் இன்று நடைபெற உள்ளது. இதையடுத்து இன்று மாலை 6.20 மணிக்கு ஐய்யப்பனுக்கு ஆபரணங்களை அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது.

சபரிமலையில் குவியும் பக்தர்கள் 

அப்போது பொன்னம்பல மேட்டில் சாமி ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் 3 முறை காட்சி தருவார். அப்போது பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்களை எழுப்புவர்.

இந்த ஆண்டு மகர ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையின் சுற்று வட்டார பகுதியில் குவிந்துள்ளனர்.

இதற்காக ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து ஏற்கனவே தங்கியுள்ளனர்.மேலும் ஏற்கனவே மகர விளக்கு பூஜை நாளில் சபரிமலைக்கு வருவதற்கு முன்பதிவு செய்தவர்களும் இன்று வர உள்ளனர்.